நுழையும் முன்:
அந்த தேசத்தின் அரசியல்வாதிகள் பேச்சைக் கேட்டு அசந்து போய்விட்டார் கடவுள்.
ஒரு அரசியல்வாதி, ""ஒரு தாய் பெற்றெடுக்க வயிறு தாங்கா காரணத்தால் தனித்தனித்தாய் பெற்றெடுத்த தம்பிகளே!..'' என்று விளித்தார். "உடன் பிறப்பே..'' என்று இன்னொரு அரசியல்வாதி அழைத்தார்.
"ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்பே..'' என்று மற்றொரு அரசியல்வாதி உருகினார்.
இவர்களின் பேச்சைக் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போன கடவுள், அந்த தேசத்தின் அரசியல்வாதிகள் அனைவரையும் அழைத்து, "உங்களைத் தலைவர்களாக வாய்க்கப் பெற்றமைக்கு உங்கள் மக்கள் குடுத்துவைத்தவர்கள். மக்கள் மீது உங்கள் பாசம் கண்டு நான் மெச்சிப் போனேன். இனியும் பிரிந்திருக்க வேண்டாம். உங்கள் தேச மக்கள் அனைவரும் உறவினர்களாக ஆகக் கடவது.'' என்று வரம் கொடுத்தார்.
சந்தேசமாக திரும்பிச் சென்ற அரசியல்வாதிகள் சில நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் கடவுளிடம் திரும்பி வந்தனர். "ஆறு கோடி மக்களும் உறவினர்களாக இருப்பதால் அனைத்து விசேசங்களுக்கும் அனைவரும் போக முயல்வதால் தேசம் திண்டாடிப் போகிறது' என்று புலம்பினார்கள். யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட கடவுள், ""உங்கள் தேசம் ஒரு ஊராக மாறக் கடவது..'' என்று மற்றொரு வரத்தை அருளினார்.
நிம்மதியாக திரும்பிச் சென்ற அரசியல்வாதிகள் மிக விரைவாக வந்தனர். உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு கட்டுப் போட்டுக் கொண்டு வந்த அவர்கள் கடவுளிடம், ""கடவுளே.. நாங்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அள்ளக் கட்சி, நொள்ளக் கட்சி என்று பல கட்சிகளாக பிரிந்திருக்கும்போதே வெட்டுகுத்தில் இறங்குவோம்.. இப்போது உறவினர்களாக மாறிவிட்டதால் எல்லா வீட்டுக்குள்ளும் அனைத்துக் கட்சிகளும் இருப்பதால், ஒவ்வொரு வீடும் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.. எங்களைக் காப்பாற்றுங்கள்..'' என்று கெஞ்சினார்கள்.
கடவுளுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. ""உங்களைத் தலைவர்களாக வாய்க்கப் பெற்றமைக்கு உங்கள் மக்கள் பாவம் செய்தவர்கள்.. இனிமேல் எல்லாக் கட்சிகளும் ஒழிந்து ஒரே கட்சியாக ஆகக் கடவது..'' என்று சாபம் கொடுத்தார்.
இப்படி கடவுளின் வரத்தாலும், சாபத்தாலும் உறவுகளாக மாறி, ஒரே கட்சியாக கலந்து, சிற்ராக சுருங்கிப் போன ஒரு தேசத்தில் நடக்கும் ஒரு சின்ன சம்பவம்தான் இந்தக் கதை.
***
காலை நேரம்..
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த ஊருக்கு பல பெயர்கள் உண்டு. தமிழகவூர், தமிழக பேட்டை, தமிழக பாக்கம், தமிழக குன்றம், தமிழக பாளையம்.. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்..
அந்த ஊர் தலைவரின் பெயர் ஜெயநிதி. உங்களுக்கே தெரியும் அங்கு வசிக்கும் அனைவரும் உறவினர்கள் என்பது. அதாவது ஊர்த் தலைவர் ஜெயநிதிக்கு அங்கு வசிக்கும் அனைவரும், மகள் மகனாகவோ, மருமகள் மருமகனாகவோ, பேரன் பேத்தி, கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி களாவோதான் இருப்பார்கள். அவர் வைத்ததுதான் சட்டம், அவர் பேச்சுக்கு இங்கே மறுபேச்சு கிடையாது. அவர்தான் நீதிபதி. அவர்தான் காவல்துறை. அனைத்து நிர்வாகங்களும் அவர்தான். சுருக்கமாகச் சொல்வதென்றால் அவரில்லாமல் ஒரு அணுவும் அசையாது அந்த ஊரில்.
வழக்கத்திற்கு மாறான அந்த ஊரின் பரபரப்புக்குக் காரணம், மூத்தவரான ஜெயநிதிக்கு அன்று பிறந்த நாள். ஊர் மக்களான அவரின் சொந்தங்கள் அனைவரும் அவரின் வீட்டுக்குச் சென்று வாழ்த்தியவண்ணம் இருந்தனர்.
"அப்பா.. இன்னும் நூறு வருசம் வாழ்ந்து எங்களையெல்லாம் வழி நடத்தணும்..''
"மாமா.. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களுக்கு நீங்கதான் தலைவரா இருக்கணும்..''
"தாத்தா.. என்னய வளர்த்த மாதிரியே என்னோட பேரனையும் நீங்கதான் வளர்க்கணும்..''
"கொள்ளுத்தாத்தா.. எனக்கு சாக்லெட் வாங்கிக் கொடுக்குற மாதிரியே, என்னோட கொள்ளுப் பேரனுக்கும் நீங்க சாக்லெட் வாங்கிக் கொடுக்கணும்..'' என்று அவரவர் உறவுமுறைக்கு ஏற்ப வாழ்த்தினார்கள்.
அனைவரின் வாழ்த்துக்களையும் அன்போடு ஏற்றுக் கொண்ட ஜெயநிதி, அனைவரையும் பார்த்து, ""என் ரத்த உறவுகளே, உங்களோட வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்களும் நோய்நொடி இல்லாம ஆரோக்கியமான வாழ்க்கை வாழ என்னோட வாழ்த்துக்கள்..'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்த ஆண்கள் கூட்டத்தை நோட்டமிட்டார்.
"என்னுடைய ஆண் சொந்தங்களுக்கு மட்டும் ஒரு விசயத்தை சொல்ல விரும்பறேன்.. குடி குடியைக் கெடுக்கும்.. குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்.. குடி நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்குக் கேடு.. அதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாம நீங்க இருக்கணும்னு கேட்டுக்கறேன்..'' என்று தன்னுடைய சிற்றுரையை முடித்துக்கொண்டு தன் கடமையாற்றப் புறப்பட்டார்.
***
"கோகிலா..''
"உள்ளேன் தாத்தா..''
"சந்திரன்''
"இருக்கேன் தாத்தா..''
பதிவேட்டினை மேலிந்து கீழ்வரை சரிபார்த்து, மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு நிமிர்ந்து பார்த்தார் பள்ளியின் ஆசிரியர் ஜெயநிதி.
"நேத்து கொடுத்த வீட்டுப் பாடங்களையெல்லாம் எழுதிட்டீங்களா?.. எல்லாரும் நோட்டை கொண்டு வந்து வைங்க..'' என்று ஆசிரியர் ஜெயநிதி உத்தரவிட்டதும் மாணவர்கள் அனைவரும் வரிசையாக வந்து புத்தகங்களை அடுக்கினர்.
மல்லிகா மட்டும் வீங்கியிருந்த வலது கையை பிடித்தபடி தாத்தாவை பயத்துடன் பார்த்தாள்.
தாத்தா அவளை ஏறிட்டுப் பார்த்து, ""என்ன எழுதலியா?..'' என்று கேட்டார்.
"நேத்து அப்பா குடிச்சிட்டு வந்து ஒரே ரகளை தாத்தா.. அம்மாவையும் என்னையும் அடிஅடின்னு அடிச்சிட்டாரு..''
"வீட்டுப் பிரச்சினைய சாக்கு சொல்லக்கூடாதுன்னு உனக்கு தெரியுமா இல்லையா..?'' தாத்தா கண்டிப்போடு கேட்டார்.
"தெரியும் தாத்தா.. அப்பா அடிச்சதுல எழுதற கையி வீங்கிப் போச்சு..'' என்று வீங்கியிருந்த தன் வலது கையைக் காட்டினாள்.
தாத்தா அவளுடைய கையை பார்த்தார். விரல்களை மடக்க முடியாத அளவுக்கு கை வீங்கியிருந்தது.
"அச்சச்சோ.. இப்படி அடிச்சிட்டானே என் பையன்.. சரி நான் அவனைப் பார்த்து பேசுறேன்.. நீ உட்காரு..'' என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தா.
மல்லிகா உட்காராமல் நின்றுகொண்டே, "எல்லாத்துக்கும் காரணம் இந்த குடிதான் தாத்தா.. பிராந்திக் கடை மட்டும் ஊர்ல இல்லாம இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.
அவள் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்துபார்த்த தாத்தாவின் முகத்தில் கடுங்கோபம்.
"மாணவர்களையெல்லாம் அடிக்கக் கூடாதுன்னு நான்தான் உத்தரவு போட்டிருக்கேன். நீ பேசுன பேச்சுக்கு உன்ன அடிக்காம இருக்கமுடியாது.. பிராந்திக் கடைய மூடணும்னு, படிக்கிற வயசுல அரசியலா பேசுறே..'' என கோபத்தோடு, அடிபடாத அவளின் இடது கையை நீட்டச் சொல்லி, பிரம்பால் ஓங்கி ஓங்கி நான்கு அடி அடித்தார். சற்றும் கோபம் குறையாத நிலையில் உடைந்து போன பிரம்பை தூக்கி அவள் மேல் எறிந்துவிட்டு இருக்கையில் அமர்ந்து நோட்டுகளைத் திருத்தத் தொடங்கினார்.
அவளுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட முடியாமல் அடிபட்ட இரண்டு கைகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாக தடவிக்கொண்டன.
***
குடிப்பகத்தில் (பாரில்) "குடி' மகன்கள் ஆங்காங்கே குடித்துக்கொண்டு இருக்க, ஒரு மூலையில் மது அருந்திய்படி சோகமாக அமர்ந்திருந்தான் சுரேஷ்.
""தம்பி சுரேசு.. என்ன சோகமா இருக்க?..'' என்றபடி அவன் அருகில் அமர்ந்தான் கண்ணன்.
சுரேஷ், பெருமூச்சு விட்டபடி ""பிரச்சினை மேல பிரச்சினைண்ணே.. என்னத்த சொல்ல..''
"பிரச்சினையா.. ஒண்ணும் சொல்லாதப்பா.. நானே எம் பிரச்சினைய மறக்கறதுக்காக வந்திருக்கேன்..'' என்று கையெடுத்துக் கும்பிட்டான்.
"என்னண்ணே.. யார்கிட்டயாவது சொன்னா பாரம் கொறையும்னு பாத்தா..''
"அப்படீங்கிற.. சரி சொல்லு..''
ஒரு மிடறு குடித்துவிட்டு சுரேஷ் பேச முயல, அவன் முன்பு கோபத்தோடு வந்து நின்றான் தேவகியின் அண்ணன் மகேந்திரன்.
மச்சானைப் பார்த்த சுரேசுக்கு உள்ளூர பயம். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "என்ன மச்சான்.. நீயெல்லாம் இங்க வந்திருக்க.. என்னையே தண்ணி அடிக்க வேண்டாம்னு அட்வைஸ் பண்ணுவே..'' என்றான்.
"இனிமேல் அட்வைசெல்லாம் பண்ணமாட்டேன்டா..'' என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைய. சுரேஷ் பின்னால் சரிந்து விழுந்தான்.
"வீட்டுச் செலவுக்கு வெச்சிருந்த காசையெல்லாம் எடுத்து குடிக்கிறதில்லாம.. பொண்டாட்டி பிள்ளைங்கள கண்டமேனிக்கு அடிக்கிறயே.. நீயெல்லாம் மனுசனாடா..'' என்று கீழே விழுந்தவனை எட்டி உதைக்கவும் செய்தான், மச்சான்.
தடுமாறி எழுந்த சுரேஷ், மகேந்திரனை அடிக்கமுயல, சண்டை தொடங்கியது. யாரோ போலீசுக்கு போன் செய்துவிட, சிறிது நேரத்தில் போலீஸ் படை வந்தது.
நாற்காலிகள் பெரும்பாலும் உடைந்து கிடந்தன; பலத்த அடிபட்டு ரத்தம் சொட்டச்சொட்ட சுரேஷ் விழுந்து கிடக்க, அவனுக்கு எதிரே குறையாத கோபத்தோடு மகேந்திரன் நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு நடுவில் வந்து நின்றார் இன்ஸ்பெக்டர் ஜெயநிதி.
தன்னுடைய குரலை உயர்த்தி, "என்னடா இங்க சண்ட..'' என்று அதட்டலாகக் கேட்டார்.
தடுமாறி எழுந்த சுரேஷ், "அப்பா.. என்னக் காப்பாதுங்கப்பா.. என்ன மச்சான்னு கூட பாக்காம, உங்க மருமகன் என்ன கொல்லப் பாக்கறான்..''
மகேந்திரனை கோபத்தோடு பார்த்தார், ஜெயநிதி.
"மாமா.. கரண்டுபில் கட்ட வெச்சிருந்த காச எடுத்து குடிச்சிருக்கான்.. தங்கச்சியையும் பிள்ளைகளையும் கண்டபடி அடிச்சிருக்கான்.. மல்லிகா கையி வீங்கிப் போயி எழுதமுடியாம இருக்கா..'' என்று அவன் மீது புகார்களை அடுக்கினான்.
"அதுக்காக நீயே சட்டத்தைக் கையில எடுத்துப்பியா.. அப்ப நா எதுக்கு இருக்கேன்..'' என்று கோபத்தோடு கேட்கிறார்.
"இவன சும்மா திருத்த முடியாது மாமா.. இவனுக்கும் அடி விழணும்.. பிராந்திக் கடையையும் அடிச்சி நொறுக்கணும்.. அப்பதான் நாங்க நல்லா இருக்க முடியும்..''
பெருங்கோபத்தோடு, "நீ என்ன தீவிரவாதியாடா.. கொலபண்ண முயற்சி பண்ணியிருக்கே.. பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியிருக்கே.. இதுக்காக உன்னக் கைதுபண்றேன்..'' என்று சொல்லி, அவன் கையில் விலங்கிட்டு, இழுத்துச் சென்றார் இன்ஸ்பெக்டர் ஜெயநிதி.
***
ஊர்ப் பொது மருத்துவமனை.
""சீப் டாக்டர் ரவுண்ட் வராரு.. நோயாளிங்க தவிர யாரும் இங்க இருக்கக் கூடாது எல்லாரும் வெளிய பேயிருங்க..'' என்று நர்ஸ் சொல்ல, அனைவரும் மெதுவாக நகர்ந்தனர்.
மண்டை, கை, கால் என பல இடங்களில் கட்டுகளோடு படுத்திருந்த சுரேஷ் எழுந்து உட்கார்ந்தான்.
கையில் ஸ்டெதஸ்கோப்புடனும், புன்னகை முகத்துடனும் உள்ளே நுழைந்தார் தலைமை மருத்துவர் ஜெயநிதி.
ஒவ்வொரு படுக்கையாக வந்து நோயாளிகளை விசாரித்து, அவர்களின் ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்து, இனி செய்ய வேண்டியதை நர்சுகளுக்கு உத்தரவிட்டுக் கொண்டு வந்தார்.
சுரேசின் படுக்கைக்கு வந்த டாக்டர் ஜெயநிதி புன்னகையோடு, ""என்ன மவனே, வலி எப்படி இருக்கு..?'' என்று கேட்டபடி அவனுடைய ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தார்.
""இப்ப பரவாயில்லப்பா..''
""ஆனா மோசமா இருக்குன்னு ரிப்போர்ட் சொல்லுதே.. நீ அடிபட்டதுல ஒரு நல்லது நடந்திருக்கு தெரியுமா?..''
சுரேஷ் புரியாமல் பார்க்க, டாக்டர் ஜெயநிதியோ, ""நீ அடிபட்டு இங்க வந்ததாலதான் உன்ன ஃபுல் செக்கப் பண்ண முடிஞ்சது.. உன்னோட உடம்புக்குள்ள ஏகப்பட்ட பிரச்சனை.. இனிமேலும் தண்ணியடிச்சியின்னா.. நீ உசுரோடவே இருக்க முடியாது.. ஒயின்ஸ்சாப் பக்கம் போகவே போகாதே..'' என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
சுரேசோ, அதிர்ச்சியில் டாக்டரப்பாவையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
***
தாக்கல் செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையை படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார் நீதிபதி ஜெயநிதி.
எதிரே குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்த மகேந்திரனை ஏறிட்டுப் பார்த்த அவர், "என்ன மருமகனே.. நீ என் மகனைக் கொலை பண்ண முயற்சிபண்ணியா?..'' என்று கேட்டார்.
""நான் அவனை அடிச்சேன் மாமா.. ரத்தம் சொட்டச் சொட்ட அடிச்சேன்.. ஆனா தப்பு எதும் பண்ணலை மாமா..'' என்று தைரியமாகச் சொன்னான் மகேந்திரன்.
"அடிக்கிறதே தப்புதானே..'' என்று கேட்டார், நீதிபதி ஜெயநிதி.
"அவன் குடிச்சது தப்பு, பொண்டாட்டி புள்ளைங்கள அடிச்சது தப்பு. அதுக்காகத்தான் நான் அடிச்சேன்.. அவன் தப்பு செய்யலைன்னா நானும் தப்புசெய்யலை..'' என்றான் மகேந்திரன்.
"அவன் அடிச்சதா எந்தப் புகாரும் வரலை.. அப்படி வந்தா அவனை நான் விசாரிக்கிறேன்..'' என்று நீதிபதி சொல்கிறார்.
"மாமா.. அவனை விசாரிச்சா மட்டும் பிரச்சினை தீர்த்திடுமா.. பிரச்சினையோட மூலகாரணம் பார்க்க வேண்டாமா.. எல்லாத்துக்கும் காரணம், இந்த குடிதானே.. அதுக்காகத்தானே, கரெண்டு பில்லு கட்ட வெச்சிருந்த காசையும் எடுக்கிறான். அதனால கரண்ட்டு கட்டு, கொசுக்கடியில குழந்தை தூங்கமுடியாம காய்ச்சல்; அவன் அடிச்சதால அவன் பொண்ணு மல்லிகாவால எழுதமுடியலை.. வாத்தியார் கிட்ட அடிவாங்கியிருக்கா.. இப்படி எல்லாப் பிரச்சினைக்கும் காரணமா இருக்கிற இந்த குடியை ஏன் தடை பண்ணக் கூடாது.. மதுக் கடையை ஏன் இழுத்து மூடக்கூடாது.. அதுக்கு நீங்க உத்தரவு போடலாமே..'' என்று மகேந்திரன் கேட்கிறான்.
""நீ சொல்றது நியாயமா இருக்கலாம்.. இந்த ஊர்ச் சட்டம் மதுக்கடையை அங்கீகரிச்சிருக்கு.. அதை மீறி நான் உத்தரவு போட முடியாது..'' என்று நீதிபதி ஜெயநிதி சொல்கிறார்.
""நியாயத்துக்கு எதிரா சட்டம் இருந்ததுன்னா.. அந்த சட்டமே வேண்டாம்.. சட்டப்படி நடக்கிற அந்த மதுக் கடையை நான் நியாயப்படி அடிச்சு உடைப்பேன்.. என்னைப் பொருத்தவரைக்கும் இது தப்பேயில்லை..'' என்று நெஞ்சுறுதியோடு சொல்கிறான்.
அவனின் உறுதியைக் கண்டு கோபமடைந்த நீதிபதி ஜெயநிதி, "நீ இப்போது இந்த ஊரோட குடிமகனா.. என்னோட சொந்த பந்தத்துல ஒருத்தனா இல்லை.. தீவிரவாதியா மாறிட்டே..'' என்றதுடன், அவனை உற்றுப்பார்த்தபடி, ”அதே சமயம் நீ மகனை அடிச்சதா ஒத்துக்கற.. பிராந்திக் கடையை உடைச்சி சட்டத்தையும் மீறுவேன்னு சொல்றே.. அதனால உன்னை ஊர்ப் பாதுகாப்புச் சட்டத்துல கைது பண்ணி, விசாரணையில்லாம ஆறு மாசம் உள்ளே வைக்க உத்தரவிடுறேன்..'' என்ற தீர்ப்பை சொல்லிவிட்டு சட்டத்தைப் பாதுகாத்த கோதாவோடு நீதிபதி ஜெயநிதி எழுந்து செல்கிறார்.
***
மதுக்கடை
கூட்டம் அதிகமாக இருக்க, பலர் முண்டியடித்துக் கொண்டு வாங்கிக்கொண்டு இருந்தனர். சுரேசும் காயக் கட்டுகளோடு அந்தக் கூட்டத்தில் முட்டிப் பார்த்தான். ஆனால் பட்ட காலிலே மீண்டும் பட்டுவிட்டதால், வலி பொறுக்கமுடியாமல் விலகி வந்துவிட்டான்.
சிறிது நேரத்தில் கூட்டம் குறைந்தது. அருகில் போய் நின்றான். வாடிக்கையாளர்களிடம் காசை வாங்குவதும், சரக்கை எடுத்துக் குடுப்பதுமாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் மதுக் கடை முதலாளி ஜெயநிதி.
""அப்பா.. எனக்கு ஒரு ஃபுல்..''
""மாமா.. இங்க ஒரு ஆப்..''
""குவாட்டர் குடுங்க தாத்தா.. நாங்க ரெண்டு பேரும் கட்டிங் போட்டுக்குறோம்..''
""கொள்ளுத் தாத்தா.. கூலிங்கா ஒரு பியர்..''
என்று அவரவர் சரக்குகளை வாங்கிக் கொண்டு சென்றனர்.
சுரேசின் முறை வந்தது. மகனைப் பார்த்ததும் மதுக்கடை ஓனரப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சி. "என்ன மகனே இந்த நிலைமையிலும் வந்திட்டியே..''
""என்னப்பா பண்றது.. கவலைக்கு மேல கவலை..''
என்ன கவலை என்பது போல் சுரேசை ஜெயந்தி பார்க்க, "அது ஒண்ணும் இல்லப்பா..உங்களுக்கே தெரியும்.. நீங்களும் எல்லா விசயத்தையும்கூட இருந்து பாத்தீங்க.. தண்ணியடிக்க பணம் இல்லேன்னு வீட்ல இருந்த பணத்த எடுத்திட்டேன்.. அதுக்காக என்னத் திட்டுனா சும்மா இருக்க முடியுமா.. பொண்டாட்டி புள்ளைய அடிஅடின்னு அடிச்சிட்டேன்.. அவங்களுக்கு ரொம்ப வலிச்சிருக்கும்.. அந்தக் கவலை ஒண்ணு.. பணம் கட்டாததால கரண்ட வேற கட் பண்ணிட்டாங்களா.. அந்தக் கவலை ஒண்ணு.. அத மறக்கறதுக்கு தண்ணியடிக்கலாம்னு வந்தா.. அவ அண்ணங்காரன், அதான் என் மச்சான் வந்து அடி அடின்னு அடிச்சிட்டான்.. பயங்கர வலி.. அது ஒரு கவலையா.. அடுத்து என்ன அடிச்சதால எம் மச்சான் ஜெயிலுக்குப் போயிட்டான்.. அதுவேற ஒரு கவலை.. இதையெல்லாம் கூட பொறுத்துக்கலாம்.. கடைசியா கட்டுப்போடறதுக்காக ஆஸ்பத்திரிக்குப் போனா.. இனிமே நான் தண்ணியே அடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்றார்.. இதுதான் பெருங் கவலையா இருக்கு.. இந்தக் கவலைய மறக்கறதுக்காகத்தான் இப்ப தண்ணி போடவே வந்திருக்கேன்..'' என்று சொன்ன சுரேஷின் கண்களில் ஏக்கம் தேங்கிநின்றது.
"சரி சரி.. கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்.. இந்தா வாங்கிட்டுப் போயி கவலைய மற.. உன்னை மாதிரி இருக்கிறவங்களாலதான் என் கடைக்கும் வருமானம் பெருகுது..'' என்று பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு ஃபுல் பாட்டிலை எடுத்துக் கொடுத்தார் ஜெயநிதி.
அதை வாங்கிக் கொண்டு கண்களை துடைத்தபடியே குடிப்பகத்துக்குள் போனான் சுரேஷ்.
***
அன்று மாலை ஊர் முழுக்க அந்த திறந்த வெளி அரங்கத்தில் கூடியிருந்தது. எல்லோர் முகத்திலும் பரவசம். ஊர்த் தலைவர் ஜெயநிதி அனைவருக்கும் இலவச உள்ளாடை வழங்கப் போவதாக அறிவித்திருப்பதுதான் இதற்குக் காரணம். அந்த உள்ளாடைகளை விரைவில் வாங்கவேண்டும் என்பதற்காக அனைவரும் மேடைக்கு முன்பாக திரள, தள்ளு முள்ளு ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது. காவல்துறை தடியடி நடத்திய பிறகுதான் கூட்டம் அமைதியானது.
காரில் வந்து இறங்கிய ஊர்த் தலைவர் ஜெயநிதி, அனைவருக்கும் வணக்கத்தை வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். தலைமை, வரவேற்புரை எல்லாம் முடிந்த பிறகு ஊர்த் தலைவர் ஜெயநிதி சிறப்புரையாற்றினார்.
""என் ரத்த உறவுகளுக்கு வணக்கம்.. உங்கள் அனைவருக்கும் இலவச உள்ளாடைகளை வழங்குகிறேனே.. எனக்கு இது எப்படி சாத்தியம் என்று உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம்.. உண்மையில் இதற்கு செலவான அத்தனை பணமும் உங்களுடையதுதான்.. நீங்கள் மதுக் கடையில் அள்ளிஅள்ளிக் கொடுத்த பணத்திலிருந்துதான் கிள்ளிக்கிள்ளி உங்களுக்கு இலவச உள்ளாடைகள் கொடுக்கிறேன்.. ஆகவே இது என் பணமல்ல உங்கள் பணம்..'' என்று சொன்னதும் கூட்டம் விசிலடித்து ஆர்ப்பரித்தது.
"அது மட்டுமில்லாமல் என் ரத்த உறவுகளே.. உங்களுக்கு உள்ளாடைகள் கொடுக்க நான் தீர்மானித்தது எதற்காக.. நீங்கள் குடித்துவிட்டு நடக்கும் போதும், தெருக்களிலும், சாக்கடைகளிலும் புரளும் போதும் உங்கள் மேலாடைகள் கலைந்து, உங்கள் மானம் போகிறது.. அதற்காகத்தான்.. உங்கள் மானத்தைக் காப்பதற்காகத்தான் உங்களுக்கு உள்ளாடைகளைக் கொடுக்கிறேன்..'' என்று சொன்னதுதான் தாமதம் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.
""மானம் காக்கும் மகத்தான தலைவர் ஜெயநிதி வாழ்க..''
""எங்களைக் கவரிமானாக மாற்றிய ஜெயநிதி வாழ்க..'' என்றவாறு ஆங்காங்கே உறவுகள் ஆர்ப்பரித்தன.
உறவுகள் வரிசையாக வர, உள்ளாடைகளை தலைவர் ஜெயநிதி அனைவருக்கும் வழங்கினார். கையில் காயக் கட்டோடும், குடித்த மதுவின் போதையோடும் உள்ளாடைகளைப் பெற்றுக்கொண்ட சுரேசுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அங்கேயே ஒரு மறைவிடத்திற்கு சென்று உள்ளாடைகளை மாட்டிக் கொண்டான்.
""உயிர் போனாலும் மானத்தைப் போகவிடாத தலைவா.. நீ வாழ்க..'' உற்சாகமாக சுரேஷ் கத்த "வாவ்' என்று வாந்தி எடுத்தான், அவன் வாயிலிருந்து ரத்தம் வழிந்தோடியது. கண்கள் இருண்டன. தடுமாறி கீழே சாய்ந்தான்.
அருகில் இருந்தவன் அவனைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ""சுரேசு செத்துப் போயிட்டான்டா..'' என்று கத்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி ஓடிவந்து பார்த்தார்கள்.
ஊர்த் தலைவராய் இருந்த ஜெயநிதி, இன்ஸ்பெக்டர் ஜெயநிதியாய் மாறி கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து, அப்பா ஜெயநிதியாய் அவனை அதிர்ச்சியோடு பார்த்தார்,
சுரேசின் மேலாடைகள் காற்றில் விலகியிருக்க, அவன் அணிந்திருந்த உள்ளாடையால் அவன் மானம் போகவில்லை, உயிர் மட்டும் போயிருந்தது.
***
அழுகையும் கூக்குரலுமாக சாவு வீடு குலுங்கியது. ஊரே அழு அழு என்று அழுதது. ஊரிலேயே அதிகமாக அழுதது சுரேசின் அப்பாவான ஜெயநிதிதான்.
""தண்ணியடிக்காதே, தண்ணியடிக்காதேன்னு என்னோட பிறந்த நாள் செய்தியா உனக்கு படிச்சுப் படிச்சு சொன்னேனே.. இனிமேல் குடிச்சா உசுரோடவே இருக்க மாட்டேன்னு அடிச்சு சொன்னேனே.. அதையும் மீறி குடிச்சு உசுர விட்டுட்டியேடா.. நீதிபதியா இருந்து உன்னைத் திருத்த நெனைச்சவனை ஜெயில்ல போட்டுட்டேனே.. அவன் இருந்தாலாவது உன்னைக் காப்பாத்தியிருப்பானே.. பிராந்திக் கடை ஓனரா இருந்து உனக்கு ஊத்திக் குடுத்து நானே உன்னைக் கொன்னுட்டேன்டா.. '' என்று ஓங்கிய குரலில் அவர் அழுது அரற்றியது கேட்டு கல் நெஞ்சக்காரர்கள் கூட கதி கலங்கிப் போயினர்.
குடிமக்களெல்லாம் கூத்தாடிக் கொண்டு வர, குடிக்காத மக்களெல்லாம் குமுறிக் கொண்டு வர, பெருங்குரலில் அப்பா ஜெயநிதி அரற்றிக் கொண்டு வர, சுரேசின் உடல் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.
***
ஜெயநிதிக்குத் துயரம் தாங்கவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. நா வரண்டு தாகத்திற்குத் தவித்தாலும் தண்ணீர் குடிக்கத் தோணாமல், கண்களைத் துடைத்தபடியே நடந்து சென்றார். அவர் நடையில் ஒரு தள்ளாட்டம் இருந்தது. எங்கே போகிறோம், எதற்குப் போகிறோம் என்ற பிரக்ஞைகூட இல்லாமல் நடந்து கொண்டிருந்தார்.
அந்த இடம் சென்றதும் அவர் கால்கள் தன்னிச்சையாக நின்றன. நிமிர்ந்து பார்த்தார். "மதுக்கடை' என்று கொட்டை எழுத்தில் பெயர்ப்பலகை தெரிந்தது. அதைப் பார்த்ததும் அவரது உதடுகள் துடித்தன. பற்கள் நற நற என்று கடித்துக் கொண்டன. கன்னங்கள் குலுக்கின. கால்கல் தடுமாற, கைகள் நடுநடுங்க விழப்போனவர் பெயர்ப் பலகையின் தாங்கியைப் பிடித்து நின்றுகொண்டார்.
பெயர்ப் பலகையை மீண்டும் பார்த்த அவர் ஒரு முடிவுக்கு வந்தவராய் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தார். பக்கத்தில் பெயிண்ட் டப்பாக்களும் ஏணியும் வைக்கப்பட்டிருந்தது. ஏணியை எடுத்து வந்து பெயர்ப் பலகையின் மேல் சாத்தினார். ஒரு வெள்ளை பெயிண்ட் டப்பாவையும் தூரிகையையும் எடுத்துக் கொண்டு ஏணியின் மீது ஏறினார். பிராந்திக் கடை என்று எழுதியிருந்த எழுத்தை தன் வைத்திருந்த வண்ணத்தைப் பூசி அழித்தார்.
மீண்டும் கீழே இறங்கி வந்து பச்சை பெயிண்ட் டப்பாவை எடுத்துக் கொண்டு ஏணி மீது ஏறினார். எதையே எழுதினார். வழிந்த வேர்வையை துடைத்து எறிந்துவிட்டு எழுதினார். விழப் போன ஏணியை அவர் எரித்து விடும் கண்களால் பார்க்க, ஏணியும் பயந்து விழாமல் நின்றது. எழுத வேண்டியதை எழுதிவிட்டு இறங்கி வந்தார்.
ஏணியை எடுத்து இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு தூரமாக வந்து பெயர்ப் பலகையைப் பார்த்தார்.
""குடி குடியைக் கெடுக்கும்.. குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்.. குடி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு'' என்று பெரிதாக கொட்டை எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்க, அந்த எழுத்துக்கள் பெயர்ப் பலகையின் 80 சதவிகித இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
அவற்றிற்குக் கீழே சிறியதாக "மதுக்கடை'' என்று எழுதியிருந்தது.
அவற்றைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயநிதியின் உள்ளம் ஆறுதல் அடைந்தது. லேசாகப் பெருமூச்சு விட்டார். "இனியும் குடித்தார்கள் என்றால் அது என் பொறுப்பு கிடையாது. அவரவர் பொறுப்பு' என்று கூறிக்கொண்டவர், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டதுபோல உணர்ந்தார். அதுவரை விலகிப் போயிருந்த அவரின் புன்னகை மீண்டும் அவரிடமே வந்து ஒட்டிக் கொண்டது. பழைய உற்சாகம் அவருக்குள் பீறிட்டு எழுந்தது.
வேகமாக நடந்து மதுக்கடைக்கு முன்னால் வந்தவர், சாவியை எடுத்து பூட்டைத் திறந்துகொண்டு தன் கடமையாற்றுவதற்காக உள்ளே போய் வாடிக்கை உறவினர்களின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தார் ஜெயநிதி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக